பாதுகாப்பு மண்டலத் திட்டங்களும் பாதுகாப்பான புனிதப் பயணமும்
சபரிமலைக்குச் செல்லும் சாலைப் பயணத்தில் பகதர்களின் பாதுகாப்பிற்காகக் கேரள சாலை பாதுகாப்புத் துறையும் கேரள மோட்டோர் வாகனத் துறையும் இணைந்து மேற்கொண்டுள்ள திட்டமே பாதுகாப்பு மண்டலத் திட்டம். 400 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்யும் பக்தர்களுக்கு இத் திட்டத்தின் சேவைகளைப் பெறலாம். மண்டல- மகரவிளக்குக் காலம் நிரைவுபெறும் வரையிலும் இத் திட்டம் செயல்படும். பக்தர்கள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக சபரிமலைப் பயணமும் தரிசனமும் நடத்தவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
குருசுவாமிகளிடம் அல்லது வாகன ஓட்டுநர்களிடம் ஆறு மொழிகளிலமைந்த எச்சரிக்கை மற்ரும் வழிகாட்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகள், டோல் மையங்கள், இடைத்தாவளங்கள் போன்ற இடங்களில் இப் பிரசுரங்கள் வழங்கப்படும். மேலும் பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள் போன்ற பல இடங்களிலும் ஆங்கிலம், தமிழ், மலையாலம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் போலீஸ் அறிவிப்புகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு மண்டலத்தின் முக்கிய அலுவலகமான எலவுங்கல் அலுவலகம் மட்டுமன்றி எருமேலி, குட்டிக்கானம் ஆகிய துணை அலுவலகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் எலவுங்கல், எருமேலி, குட்டிக்கானம் ஆகிய பகுதிகளில் 24 பாதுகாப்புக் குழுக்கள் விழிப்போடு செயல்பட்டுவருகின்றன. சபரிமலை புனிதப் பயணக் காலத்தில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஒரு கோடி வாகனங்கள் சபரிமலைக்கு வரலாம் என் எதிர்பார்க்கப்படுகின்றது. இக் காலத்தில் நாங்கு லட்சம் கிலோமீட்டர் சுற்றளவில் போலீஸ் வாகனப் பாதுகாப்பு இருக்கும். இப்பகுதிகளில் சிறப்பான ‘ஆம்புலன்ஸ்’ சேவையும் உண்டு. விபத்துகளோ உடல்நலக் குறைவோ ஏற்பட்டால் பக்தர்கலைக் காப்பாற்ற எல்லா மருத்துவ உதவிகளும் கிடைக்கும். போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டால் உடனடி சீரமைப்பதற்கான் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் பழுதுபட்டால் இலவசமாக சரிசெய்வதற்கான வசதிகளும் உள்ளன. 40 டன் பாரமுள்ள வாகனங்கள் வரை இவ்வாறு பழுது பார்க்கலாம். எலவுங்கல்லில் இதற்கான ஒரு ‘மொபைல்’ பழுதுபார்க்கும் யூனிட் தயார்நிலையில் உள்ளது.
பாதுகாப்பு மண்டலம்: அவசரத் தேவைக்கான எண்கள்
மண்டல-மகரவிளக்குக் காலங்களில் சபரிமலைச் செல்லும் பயணிகளுக்காகப் பாதுகாப்பு மண்டலத் திட்டம் திறம்படச் செயல்படுகிறது. பக்தர்கள் இதன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வாகன விபத்து முதலான அவசரத் தேவைகளுக்குக் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
எலவுங்கல் – 09400044991, 09562318181
எருமேலி – 09496367974, 08547639173
குட்டிக்கானம் – 09446037100, 08547639176
மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
safezonesabarimala@gmail.com