ஆரியங்காவு சாஸ்தா கோயில்

அய்யப்பன் கோயில் இருக்கும் காரணத்தால் பிரசித்தமானது ஆரியங்காவு. கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து அய்யப்பன் கோயில்களில் ஒன்று ஆரியங்காவு ஐயப்பன் கோவில். இக்கோயில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. ஆரியங்காவு சாஸ்தா கோயில் என்றும் இக்கோயில் அறியப்படுகின்றது. ஐயப்பன் ஒரு குமரனாக இங்கு காட்சியளிக்கிறார். ஐயப்பனைத் திரு ஆரியன் என்றும் அழைக்கப்படுவதால் இவ்விடம் ஆரியன்காவு என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.

 திருவனந்தபுரம்- தென்காசி நெடுஞ்சாலையில் வனப்பகுதியின் நடுவே இக்கோயில் உள்ளது. சபரிமலையைப் போலவே இங்கும் 10 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதினைக்கொண்ட பெண்களை இங்கே அனுமதிப்பதில்லை. தமிழ்ப் பாரம்பரியம் அனுசரித்து இங்கு பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தேவி, சிவன், சாஸ்தா ஆகியோரின் உருவங்களும் ஸ்ரீகோயிலுக்குள் காணப்படுகின்றன. இடப்பக்கம் தேவியும், வலப்பக்கம் சிவனும், நடுவில் குமர வடிவில் ஐயப்பனும் அமர்ந்துள்ளனர்.

சபரிமலை மண்டலக் கால பூஜை நிறைவடையும் நாளில் இங்கு விழா நடைபெறுகின்றது. பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், கும்பாபிஷேகம் ஆகியவை இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களாகும். கொல்லம் – புனலூர் – தென்காசி வழியாகவோ, திருவனந்தபுரம் – தென்காசிப் பாதை வழியாகவோ இக்கோயிலைச் சென்றடையலாம்.

 

தொடர்புக்கு

 

உதவிக்கு

ghj

Updated Schedule

sdfcgvhj