கேரளத்திலுள்ள முக்கியமான ஐந்து ஐயப்பன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் ’கிரஹஸ்தா ஆஸ்ரம’ வாழ்க்கையை மேற்கொள்வதாகக் கருதப்படுகின்றது. ஐயப்பன் பூர்ணா, புஷ்கலா என்னும் இரண்டு மனைவிமாருடன் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதாகவும் நம்பப்படுகின்றது. இங்குள்ள பிரதிஷ்டையைப் பரசுராமன் நிறுவியதாகவும் கருதப்படுகின்றது.
விஷப் பாம்பு தீண்டியவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் குணமடைவர் என்று கருதப்படுகின்றது. இது இந்தக் கோயிலின் முக்கியத்துவத்திற்கான ஒரு காரணமாகும். இங்கு பிரதிஷ்டை சேய்யப்பட்டிருக்கும் அய்யப்பனின் இடது கையில் எப்போதும் சந்தனமும் தீர்த்தமும் (புனித நீர்) தாங்கியிருக்கக் காணலாம். பாம்பு கடித்தவர்களின் விஷத்தைப் போக்க இவ்விரண்டும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
ஐயப்பனுடன் தொடர்புடைய பிற தெய்வங்களும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் முறைப்படியே இங்கும் பூஜைகளும் வழிபாடுகாளும் நடைபெறுகின்றன.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இங்கும் வந்து ஐயப்பனை வழிபட்டுச் செல்கின்றனர். பரசுராமனே இங்குள்ள பிரதிஷ்டையும் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. ஐயப்பனின் இருமருங்கும் பூர்ணாவும் புஷ்கலாவும் அமர்ந்திருக்கக் காணலாம். மார்கழி மாதம் முதல் பத்து நாட்கள் (மலையாள தனு மாதம்) இங்குள்ள முக்கிய விழா நடைபெறும்.