செய்யக்கூடியன :
|
செய்யக்கூடாதன:
|
பாதுகாப்பு :
|
செய்யக்கூடியன :
|
செய்யக்கூடாதன:
|
பாதுகாப்பு :
|
பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத சபரிமலை
சபரிமலையையும் அதன் சுற்றுப்புறங்களையும் பசுமையாகவும் பிளாஸ்டிக் (நெகிழி) குப்பைகள் இல்லாத இடமாகவும் பாதுகாக்க, பசுமை சபரிமலை என ஒரு திட்டம் செயல்படுகிறது. பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சிக்குழுவின் மேற்பார்வையில் இதற்கான ஒரு குழு செயல்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும், பம்பை ஆற்றைத் தூய்மையாகப் பாதுகாக்கவும் இக் குழு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தேவஸ்வம் போர்டு, வனத்துறை, குடும்பஸ்ரீ, காவல்துறை, பொதுமக்கள் தொடர்புத் துறை போன்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இக்குழு செயல்படுகின்றது.
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுச் செயல்பாடு என்ற நிலையில் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் அடங்கிய அரை லட்சத்திற்கும் அதிகமான துணிப்பைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. நிலைக்கல் பகுதியிலும் செங்கன்னூர் ரயில்நிலையத்திலும் இப்பைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகளை பம்பையாற்றில் களைவதைத் தடுக்கவும் கண்காணிக்கவும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை சானிட்டேஷன் சொசைட்டியும் இதற்கு ஒத்துழைக்கின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த என்.எஸ்.எஸ். தொண்டர்களும் சபரிமலைப் பசுமைத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
கானமலை – ளாகா, ளாகா – பம்பை சாலைகளிலும், நிலைக்கல்லிலும், பம்பையிலும் காணப்படும் பிளாஸ்டிச் முதலான குப்பைகளை சேகரிக்கவும் அகற்றவும் ‘சுசித்துவ மிஷன்’ தலைமையில் தொண்டர்கள் செயல்படுகின்றனர். திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் கம்பனி இக் குப்பைகளை மறுசுழற்சி செய்கின்றது. பிளாஸ்டிக் பாட்டில், கவர் முதலான பொருட்களை இடுவதற்காகவே நிலைக்கல்லிலும் பம்பையிலும் ஆறு பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பம்பை, நிலைக்கள், பந்தளம் ஆகிய இடங்களில் குப்பைகளைப் பதப்படுத்த நூற்றுக்கும் அதிகமான நீராவித் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும், பம்பையில் துணிமணிகளை எறியாமல் இருக்கவும் விழிப்புணர்வுப் பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன.
சபரிமலைப் பயணத்திற்காக செங்கன்னூர் ரயில்நிலையம் வந்திறங்கும் பக்தர்களுக்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் செய்திகள் பரிமாறுவதற்கான தகவல் நிலையம் உள்ளது.
புண்ணியம் பூங்காவனம்
சபரிமலை மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பாதுகாப்பதற்கான இன்னொரு திட்டமே ’புண்ணியம் பூங்காவனம்’ திட்டம். தேவஸ்வம் போர்டு, காவல் நிலையம் மற்ரும் பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுகிறது. சன்னிதானமும் அதன் சுற்றுப்புறங்களும் தினமும் காலை 9 மணி முதல் 10 மணிவரை தூய்மைப்படுத்தப்படுகின்றன.
சபரிமலையைத் தூய்மைப்படுத்துவதில் ஐயப்ப பக்தர்களையும் பங்குபெறச் செய்வதே புண்ணியம் பூங்காவனம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சபரிமலைக்கு வரும் முக்கிய நபர்களும் இச்செயல்பாட்டில் ஈடுபடக் காணலாம். காலுறை,கையுறை இவற்றைப் பயன்படுத்தியே தூய்மைப் பணிகள் செய்யப்படுகின்றன. எல்லாவிதமான குப்பைக் கூளங்களியும் சபரிமலையிலிருந்து நீக்குவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கம். ஐ.ஜி.பி.விஜயன் அவர்கள் 2011 ஆம் ஆண்டு இந்த ஒருமணிநேர தூய்மைப்பணிகளைத் துவக்கிவைத்தார்.
தூய்மைப் பணிக்காக 900 தொண்டர்கள்
பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியாளர்கள் ஐயப்ப சேவா சங்கத்தின் ஒத்துழைப்புடன் பம்பையிலும் நிலைக்கல்லிலும் சன்னிதானத்திலும் தூய்மைப் பணிகளைச் செய்ய 900 தொண்டர்களை அமர்த்தியுள்ளனர். இவர்கள் அனைவருமே தொண்டுமனப்பான்மையுடன் தமிழகத்திலிருந்து வந்தவர்களாவர். 300 பேர் சன்னிதானத்திலும், 205 பேர் பம்பையிலும், 360 பேர் நிலைக்கல்லிலும், 25 பேர் பந்தளத்திலும், 10 பேர் குளநடையிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாகப் பம்பையையும் சன்னிதானத்தையும் தூய்மையாக வைத்திருப்பதில் பல்வேறு திட்டங்களுடன் விழிப்புணர்வுடன் 24 மணிநேரமும் திரம்படச் செயல்பட்டு வருகின்றது சபரிமலை பசுமைத் திட்டம்.