குளத்துப்புழை சாஸ்தா கோயில்

கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் தாலுக்கில், குளத்துப்புழை என்னும் இடத்தில் கல்லடை ஆற்றின் கரையோரம் இக்கோயில் உள்ளது. ‘பால சாஸ்தா’ என்ற பெயரில் சுவாமி ஐயப்பன் இங்கு குடிகொள்கிறார். கேரளத்தில் உள்ள முக்கியமான 108 சாஸ்தா கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள பிரதிஷ்டை பரசுராமனால் நிறுவப்பட்டது என்பது நம்பிக்கை. இங்கு உக்கிரமூர்த்தியாகவும் மங்களப் பிரதாயனாகவும் பகவான் காட்சியளிக்கிறார். உப தெய்வங்களாக சிவன், யக்ஷி, விஷ்ணு, கணபதி, பூதநாதன், நாகர், கறுப்பஸ்வாமி ஆகியோர் கோயில்கொண்டுள்லனர். இக்கோயில் பந்தளம் அரசரால் உருவாக்கப்பட்டது என்றும், பிரதிஷ்டை கொட்டாரக்கரையைச் சார்ந்த அந்தணர் ஒருவரால் அமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. முதலில் கொட்டரக்கரை அரசரின் கைவசம் இருந்த இக்கோயில் பின்னர் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்குக் கைமாறப்பட்டது. இக்கோயிலின் பக்கத்திலுள்ள குளம் குறிப்பிடத்தக்க ஒன்று. சரும நோய் நீங்குவதற்காகப் பக்தர்கள் இக்குளத்தில் ‘மீனூட்டு வழிபாடு’ (மீன்களுக்கு உணவளித்தல்) நடத்துவதுண்டு. இந்நிலையில் ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள மீன்களைப் பிடிப்பது கடினமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. கோயிலின் தந்திரி உரிமை கோக்களத்து மடத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தின் கிழக்குப் பக்கம், திருவனந்தபுரம்-செங்கோட்டை சாலையில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டுப் பகதர்களுக்கு தென்காசி-செங்கோட்டை-ஆரியன்காவு-தென்மலை பாதை வழியே இக்கோயிலுக்கு வரலாம். தென்மலை மிக அருகிலுள்ள ரயில் நிலையம். இது கோயிலிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஏப்ரல், மே மாதத்தில் வரும் விஷு மகோத்சவம் இக்கோயிலின் முக்கிய விழாவாகும். சித்திரை மாதம் (மலையாள மேட மாதம்) 5 முதல் 14 வரை நடைபெறும் திரு உத்சவமும் முக்கிய விழாவாகும்.

 

தொடர்புக்கு

 

உதவிக்கு

ghj

Updated Schedule

sdfcgvhj