அன்னதான மண்டபம்

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்

உலகப் புகழ் வாய்ந்த சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில், மேற்குத் தொடர்ச்சி மலையில், பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் தெற்குப் பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் கோயில் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பனை ‘அன்னதான பிரபு’ என்றே பக்தர்கள் அழைப்பர். எனவே ஐயப்ப தர்மத்தின்படி இங்கு தரிசனம் செய்ய வருகின்ற அனைத்துப் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்படுகின்றது.

சபரிமலையிலும் பம்பையிலும் மட்டுமன்றி, இடைத்தாவளங்களிலும் பக்தர்களுக்கு உணவு வழங்க, சபரிமலை ஆட்சிக்குழுவாகிய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவதால் அன்னதானத்திற்குப் பெருந்தொகை தேவைப்படும்.  எனவே தேவஸ்வம் போர்டு ‘சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. சபரிமலைக்கும் பிற கோயில்களுக்கும் வருகைதரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

அன்னதானம் வழங்குவதற்காக மாளிகைப்புறம் கோயிலின் பின்புறத்தில் அன்னதான மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மண்டபங்களுள் ஒன்று. நாள் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வசதிகளையும் போர்டு செய்துள்ளது.

நன்கொடை வழங்குவதற்கான முகவரி:
தலைமை அலுவலர்
சபரிமலை தேவஸ்வம்
பத்தனம்திட்டை மாவட்டம்
கேரளம்
தொலைபேசி: 04735-202028
Phone: 04735-202028

அல்லது
The Devaswom Accounts Officer,
Travancore Devaswom Board Building,
Nanthancode, Thiruvananthapuram
(Phone: 0471-2315837) Fax:0471-2315834
Email:devaswomaccountsofficer@gmail.com

என்ற முகவரியிலும் அனுப்பலாம்.

நன்கொடை வழங்குவோர் ‘சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்’ (Sabarimala Sree Dharma Sastha Annadhana Trust) பெயரில் l’கிராஸ்’ செய்த காசோலை அல்லது ’டிமாண்ட் டிராஃப்ட்’ மூலம் பணம் செலுத்தலாம்.

நன்கொடை தொகைக்கு 80G (5) (vi) பிரிவின் படி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Account Numbers for RTGS/NEFT
Dhanalaxmi Bank
Nanthancode, Thiruvananthapuram
Account No: 012601200000086  IFS Code: DLXB0000275

HDFC Bank, Sasthamangalam, Thiruvananthapuram
Account No: 15991110000014, IFS Code: HDFC0001599

Online Donation through www.sabarimala.tdb.org.in

Net Bank facility
    www.dhanbank.com (Dhanalaxmi Bank)
    www.hdfcbanks.com (HDFC Bank)

நன்கொடை வழங்குவோருக்கான தனிச் சலுகைகள்:

ஐம்பது லட்சம் ரூபாய்: (Rupees Fifty lakhs)
ஒருநாள் மூன்று வேளை என்ற நிலையில் பத்து ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.

ஓராண்டில் ஐந்து நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர).

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

இருபத்தைந்து லட்சம் ரூபாய்: (Rupees Twentyfive lakhs)

ஒருநாள் மூன்று வேளை என்ற நிலையில் நான்கு ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் மூன்று நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர).

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

இருபது லட்சம் ரூபாய்: (Rupees Twenty Lakh)

ஒருநாள் மூன்று வேளை என்ற நிலையில் மூன்று ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் இரண்டு நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). பத்து ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

பதினைந்து லட்சம் ரூபாய்: (Rupees Fifteen lakh)

ஒருநாள் இரண்டு வேளை என்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் மூன்று நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). ஐந்து  ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

பத்து லட்சம் ரூபாய்:  (Rupees Ten lakh)

ஒருநாள் இரண்டு வேளை என்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் இரண்டு நாட்கள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). ஐந்து  ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

ஐந்து லட்சம் ரூபாய்: (Rupees Five lakh)

ஒருநாள் இரண்டு வேளை என்ற நிலையில் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் ஒருநாள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). இரண்டு ஆண்டுகளுக்கு.

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

மூன்று லட்சம் ரூபாய்: (Rupees Three lakh)

ஒருநாள் ஒரு வேளை என்ற நிலையில் நன்கொடையாளரின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்

ஓராண்டில் ஒருநாள் இலவசமாகத் தங்கும் வசதி செய்துதரப்படும் (மண்டல பூஜை, மகரவிளக்கு விழாவுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தவிர). ஓராண்டுக்கு

வசதியான தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இரண்டு டின் அரவணையும் (250 மில்லி வீதம்), இரண்டு பாக்கெட் அப்பமும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

ரூபாய் நூறின் மடங்கு என்ற நிலையில் ஒரு பக்தருக்கு எவ்வளவு பணம்வேண்டுமானாலும் அனுப்பலாம். நிர்வாகம், கம்பனி அல்லது குழுவின் பெயரில் நன்கொடை வழங்குவோர் அவர்கள் குறிப்பிடும் ஒரு நபருக்கு சலுகைகள் அளிக்கப்படும். தனியாக நன்கொடை வழங்குவோரும் அவர்கள் விரும்பினால் இன்னொருவரின் பெயரைப் பரிந்துரை செய்யலாம்.

அன்னதான நன்கொடை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.
சுவாமி ஐயப்பனின் அருள் எல்லோருக்கும் உண்டாகட்டும்.

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்
தேவஸ்வம் கமிஷனர் அண்ட் டிரஸ்ட்டி
தேவஸ்வம் கமிஷனர் அலுவலகம்
நந்தன்கோடு
திருவனந்தபுரம்- 695 003

தொலைபேசி: 0471-2315156, 2314288
பேக்ஸ்: 0471-2315156
மின்னஞ்சல்: sabarimala.aanadhanam@gmail.com