ஆறன்முளை பார்த்தசாரதி கோயில்

     108 திவ்ய தேசங்களுள் ஒன்று ஆறன்முளை பார்த்தசாரதி கோயில். பன்னிரு ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலம். கேரளத்தில் பத்தனம்திட்டை மாவட்டத்தில் ஆறன்முளை என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இது கேரளக் கட்டடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 6 முதால் 9 வரியுள்ள நூற்றாண்டுகளில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இக்கோயிலைப் பற்றிப் பாடியிருக்கக் காணலாம்.

     விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனுக்கான கோயில் இது. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பார்த்தசாரதி என்று அறியப்படுகின்றார். மகாபாரதப் போரில் அர்ஜுனனின்( பார்த்தன்) தேரோட்டியாக (சாரதி) செயல்பட்டதால் கிருஷ்ணன் இப்பெயர் பெற்றார். குருவாயூர், திருச்சம்பரம், திருவார்ப்பு, அம்பலப்புழை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயில்களைப்போல் ஆறன்முளை கிருஷ்ணன் கோயிலும் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. செங்கன்னூர் பகுதியிலுள்ள முக்கியமான ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் மகாபாரத நிகழ்வுடன் தொடர்புடையது. பஞ்சபாண்டவர்கள் ஐவரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோயில் காட்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உதிஷ்ட்டிரன் (தர்மபுத்திரன்) திருச்சிற்றாறு மஹாவிஷ்ணு கோயிலும், வீமன் புலியூர் மஹாவிஷ்ணு கோயிலும், அர்ஜுனன் ஆறன்முளைக் கோயிலும், நகுலன் திருவண்வண்டூர் மஹாவிஷ்ணு கோயிலும், சகதேவன் திருக்கடித்தானம் மஹாவிஷ்ணு கோயிலும் கட்டியதாக ஐதீகம்.

     ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு அணிவிக்கவேண்டிய ஆபரணங்களை பந்தளத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர் அவ்வாறு எடுத்துச்செல்லும்போது இடையே சிறிது நேரம் பார்த்தசாரதி கோயிலில் தங்குவதுண்ட. திருவிதாங்கூர் மன்னரால் ஐயப்பனுக்கு வழங்கப்பட்ட தங்க அங்கியும் தங்க ஆடையும் இங்குதான் பாதுகாக்கப்படுகின்றன. மண்டலபூஜை காலத்தில் அவை இங்கிருந்து சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும். இக்கோயிலைச் சுற்றி நாங்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்குக் கோபுரத்தின் கீழ் பதினெட்டு படிகள் உள்ளன. வடக்குக் கோபுரத்தின் கீழ் 57 படிகள் உள்ளன. அப்படிகள் வழியாகப் பம்பையாற்றில் இறங்கலாம். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாகக் கருதப்படும் சுவரோவியங்களையும் இக் கோயிலில் காணலாம்.

     தினமும் காலை 4 மணிமுதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணிவரையும் இங்கு தரிசனம் நடத்தலாம். இக்கோயில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் பராமரிப்பின் கீழ் உள்ளது

 

தொடர்புக்கு

 

உதவிக்கு

ghj

Updated Schedule

sdfcgvhj