செய்யக்கூடியனவும் செய்யக்கூடாதனவும்

செய்யக்கூடியன :
 • ஒவ்வொரு பத்து நிமிடங்கள் மலை ஏறும்போதும் ஐந்து நிமிடம் ஓய்வு எடுக்கவும்.
 • பரம்பரைப் பாதை வழியைப் பயன்படுத்தவும்—மரக்கூட்டம், சரம்குத்தி, நடப்பந்தல், சன்னிதானம்
 • பதினெட்டாம் படியை அடையும்போது வரிசைமுறையைப் பின்பற்றவும்.
 • திரும்பி வரும்போது நடைப்பந்தல் மேம்பாலத்தைப் பயன்படுத்தவும்.
 • மலம், சிறுநீர்க்கழிக்க கழிப்பறைகள் பயன்படுத்தவும்
 • பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு அவசரப்படாமல் பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கிச் செல்லவும்.
 • டோளியைப் பயன்படுத்துவோர் அதற்கான கட்டணத்தை தேவஸ்வம் மையங்களில் செலுத்தி, அதற்கான ரசீதைப் பாதுகாத்துக்கொள்ளவும்.
 • பரிசோதனை மைய அலுவர்களுடன் ஒத்துழைத்து பாடுகாப்பை உறுதிப்படுத்தவும்.
 • தேவை ஏற்பட்டால் காவலர்களை (போலீஸ்) அணுகவும்.
 • சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் காவலர்களைத் தெரியப்படுத்தவும்.
 • உரிமம் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே உணவு முதலான பொருட்களை வாங்கவும்.
 • பம்பை, சன்னிதானம் போன்ற இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
 • நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
 • குப்பைக்கூளங்களை அதற்குரிய பெட்டிகளில் மட்டுமே இடவும்.
 • தேவைப்பட்டால் மருத்துவ வசதிகளையும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) மையங்களை அணுகவும்.
 • குழந்தைகள், முதியோர், மாளிகைப்புறங்கள் (பெண் குழந்தைகள்) ஆகியோர் பெயர், முகவரி, தொடர்பு எண் குறிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கழுத்தில் அணிவது நல்லது.
 • உடன் வந்த பக்தர்களில் யாரேனும் குழுவிலிருந்து விலகிச் சென்றுவிட்டால் உடனடியாக காவல் மையங்களில் தெரியப்படுத்தவும்.
செய்யக்கூடாதன:
 • கோயில் வளாகத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.
 • பம்பையிலும் சன்னிதானத்திலும் வழியிலும் புகைபிடித்தல் கூடாது.
 • மதுவோ போதைப் பொருட்களோ பயன்படுத்தக் கூடாது.
 • வரிசை மீறுதல் கூடாது.
 • வரிசையில் நிற்கும்போது இடித்து நெருக்கவேண்டாம்
 • எவ்விதமான ஆயுதங்களோ வெடிப்பொருட்களோ எடுத்துச் செல்லக்கூடாது.
 • உரிமம் இல்லாத கடைக்காரர்களை/ வியாபாரிகளை அணுகவேண்டாம்.
 • கழிப்பறைகளுக்கு வெளியே மலம், சிறுநீர் கழிக்கக் கூடாது.
 • எந்த சேவைக்கும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது.
 • தேவைகள் ஏற்பட்டால் காவல் மையங்களை அணுகத் தயங்கவேண்டம்.
 • ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் அல்;லாமல் குப்பைக் கூளங்களை கண்ட இடங்களில் வீசி எறியக்கூடாது.
 • பதினெட்டாம் படியில் தேங்காய் உடைக்கக் கூடாது.
 • பதினெட்டாம் படியின் இருபக்கங்களிலும்  உள்ள குறிப்பிட்ட இடங்களில் அல்லாமல் பிற இடங்களில் தேங்காய் உடைக்கக் கூடாது.
 • பதினெட்டு படிகள் ஏறும்போது முட்டால் இழைந்து செல்லக்கூடாது.
 • திரும்பி வரும்போது நடைப்பந்தல் மேம்பாலத்தின் வழியாக அல்லாமல் வேறு வழிகளைப் பயன்படுத்தவேண்டாம்.
 • மேல் திருமுற்றத்திலோ, தந்திரி நடையிலோ இளைப்பாறுவதைத் தவிர்க்கவேண்டும்.
 • கீழ் திருமுற்றம் மற்றும் நடைப்பந்தல் வழிகளில் விரி விரிக்கக்கூடாது.
பாதுகாப்பு :
 • வாணவெடிகள் மத்தாப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
 • ஆயுதங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
 • சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, ஸ்டவ் போன்றவை பயன்படுத்தக்கூடாது.
 • தீயைப் பயன்படுத்தத் தேவையிருந்தால், தேவைக்குப்பின் உடனடியாக அணைத்துவிட வேண்டும்.
 • பதினெட்டாம்படி ஏறுவதற்கு முன் உங்களையோ, உங்கள் உடைமைகளையோ பரிசோதனைக்கு வேண்டினால் ஒத்துழைக்கவும். மறுத்தல் கூடாது.