மலையாலப்புழை தேவி கோயில்

     கேரளத்தில் மலையாலப்புழை என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. இது ஒரு பகவதி கோயில். கேரளத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததும் பரவலாக அறியப்படுகின்றதுமான பகவதி கோயில் இது.

     கோயிலின் உள்ளே சிறியதாக ஒரு நமஸ்கார மண்டபமும், ஒரு சுற்றம்பலமும், பலிக்கல்புரையும் உள்ளன. இக்கோயில் 3000 ஆண்டுகள் பழக்கமுடையதாகக் கருதப்படுகின்றது. கிழக்குப் பக்கம் அழகான ஒரு கோபுரத்துடன் மிகப்பெரியதோ சிறியதோ அல்லாமல் அமைந்தது இக்கோயில். ஸ்ரீகோயிலின் உள்ளே நீள்சதுர வடிவில் முகமண்டபம் உள்ளது. இங்குள்ள பிரதிஷ்டை ‘கடு சர்க்கரை யோகம்’ என்னும் நுட்பப்படி செய்யப்பட்டதாகும். பலவிதமான மரத் துண்டுகள், களிமண், மூலிகைச் செடிகள், பால், நெய், சர்க்கரை, மஞ்சள், சந்தனம், கற்பூரம், தங்கம், வெள்ளி, மணல், இயற்கையான பசை போன்றவை இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மனித உடலும் இவ்வாறு அமையப்பெற்றதுதான் எனக் கூறுவர்.

    பிராண பிரதிஷ்டை என்னும் சடங்கின்படி, தாந்திரக முறைப்படி ஆற்றலும் சக்தியும் கிடைக்கும் நிலையில் தேவியின் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஒரு சிவலிங்கமும் காணப்படுகின்றது அது சுயம்பு என்றும் அளர்ந்துகொண்டே வருகின்றது என்றும் நம்பப்படுகின்றது. சிவலிங்கத்திற்குத் தனிக் கோயில் இல்லை. எப்போதும் பூக்கின்ற ஒரு கொன்றைமர நிழலின் கீழ் சிவலிங்கம் பாதுகாப்பாக உள்ளது.

     பத்ரகாளி தேவி முக்கிய கடவுளாவார். பார்வதி தேவியிடமிருந்து உருவானவள். ஆனாலும் எல்லோருக்கும் அம்மாவாகக் கருதப்படுகின்றாள். காளிதேவியின் உருவம் ஐந்தரை அடி உயரம் கொண்டது. சாதாரணமாகக் கடவுளின் உருவம் கல்லில் பொறிக்கப்படும். இதற்கு மாறான நிலையில் வேறு பல பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

     விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி போன்றவை இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களாகும். இவ்விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. எல்லா தேவி கோயில்களிலும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் முக்கிய நாட்களாகும். இந்நாட்களில் இங்கு பெருங்கூட்டம் காணப்படும். தேவி தரிசனத்திற்காகப் பல மணிநேரம் காக்கவேண்டி வரும். மலையாலப்புழை தேவி கோயில்  வருடாந்திர விழா மாசி மாதம் திருவாதிரை நாளில் ஆரம்பமாகும். பதினொன்றாம் நாள் ஆறாட்டு (நீராட்டு) நடைபெறும்.

   அரிசிப் பாயசம், நெய்விளக்கு, நிறைபறை (அரிசி, நெல், சீனி) ஆகியவை முக்கிய வழிபாட்டுப் பொருள்களாகும். திருநீறு, சந்தனம், எண்ணெய், பால், நெய், இளநீர் போன்றவற்றால் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன.

சுவாமியே சரணம் ஐயப்பா.

தொடர்புக்கு

 

உதவிக்கு

ghj

Updated Schedule

sdfcgvhj