செங்கன்னூர் மகாதேவர் கோயில்

மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில் செங்கன்னூர் மகாதேவர் கோயி. இக்கோயில் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வட்டவடிவிலான கோஉஇல் அமைப்பும் விசாலமான கோயில் வளாகமும் கொண்டது. சிவனும் பார்வதியும் இங்கே கோயில்கொண்டுள்ளனர். பிற கோயில்களிலிருந்து மாறுபட்டு, இங்கு இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன. சிவபெருமான் கிழக்கு நோக்கியும் பார்வதி தேவி மேற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். முக்கிய கோயில் செம்புக் கூரை வேயப்பட்ட வட்டவடிவிலானதாகும். டேவியின் விக்கிரகம் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் தங்கத் தகட்டால் பொதியப்பட்டுள்ளது. சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

    கோயில் வளாகத்தில் கணபதி, சாஸ்தா, சண்டிகேஸ்வரன், நீலகிரீவன், கங்கை, நாகர் போன்ற தேவர்களின் பிரதிஷ்டைகளும் உள்ளன. பக்கத்தில் கிருஷ்ணன் கோயிலும் உள்ளது.

     கோயிலின் வடிவமைப்பைப் பார்த்தால், இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என் எண்ணத் தோன்றும். பெருந்தச்சன் என்னும் புகழ்பெற்ற சிற்பியே இதைக் கட்டியிருக்கவேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கு தீ விபத்து ஏற்பட்டதால் கோயில்  சேதமடைந்துவிட்டது. பின்னர் வங்கிப்புழை தம்புரான் என்பவர் கூத்தம்பலத்தைத் தவிரப் பிற பகுதிகளைப் புனரமைத்தார். பெருந்தச்சனின் கைவண்ணத்தால் உருவான கூத்தம்பலத்தைப் புனரமைக்க முடியவில்லை. எல்லாப் பக்கங்களிலும் விளக்க் பொருத்திவைத்தாலும் ஆடுவோரின் நிழல் கீழே விழாதவண்ணம் கூத்தம்பலம் வடிவமைக்கப்பட்டதாகக் கூறுவர். கோயிலின் முன்னாலுள்ள முகமண்டபமும் பிற மண்டபங்களும் மரவேலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன.

     பிற கோயில்களுடன் ஒப்பிடும்போது இக்கோயிலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைக் காணமுடியும். திருப்பூத்தாறாட்டு இக்கோயிலில் மட்டும் நடைபெறும் ஒரு விழாவாகும். இது செழுமையின் ஒரு அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இது தேவியின் மாதவிடாயுடன் தொடர்புடைய ஒரு விழாவாகும். எனவே மாதம்தோறும் கொண்டாடப்படுகிறது. எனவே இக்கோயில் சக்திபீடமாகவும் கருதப்படுகின்றது.

 

தொடர்புக்கு

 

உதவிக்கு

ghj

Updated Schedule

sdfcgvhj